நாம் தமிழர் கட்சியினர் 53 பேர் கைது

திருமங்கலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேரறிவாளன் சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களையும், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் வெளியூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ராஜாஜி சிலைக்கு அருகில் மதுரை மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் 161-வது சட்டபிரிவை பயன்படுத்தி சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மறுக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, மேலும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருமங்கலம் காவல் துறையினர், இக்கூட்டத்திற்கு சிறப்புரை ஆற்ற வந்த அக்கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் நெல்லை மதிவாணன், தஞ்சை கரிகாலன்,மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் இருளாண்டி,மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் மகாதேவன்,தெற்கு மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் முருகன்,

மகளிர் பாசறை சாராள், பாண்டியம்மாள்,மாவட்ட உழவர் பாசறை செயலாளர் பாண்டித்துரை, மதுரை வடக்கு தொகுதி தலைவர் எரிமலை முருகன், வடக்கு தொகுதி செயலாளார் சிவக்குமார், திருமங்கலம் தொகுதி தலைவர் அருள், திருமங்கலம் தொகுதி பொருளாளர் மாரிமுத்து, திருமங்கலம் தொகுதி செய்தி தொடர்பாளர் நாகேந்திரன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை திருமங்கலம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி லதா தலைமையில் போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டவர்களை திருமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!