மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளது.இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழிற்பேட்டையாகயும் திகழ்கிறது.இதன் மூலம் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றன.
இப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் மற்றும் பொருள்களை இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கமாக செயல்பட்டு சரக்குகளை இறக்கி மற்றும் ஏற்றி அதன் மூலம் தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலைகள் தங்களது ஆலையில் பணி செய்யும் ஊழியர்களை வைத்து சரக்கு மற்றும் பொருள்களை ஏற்றி இறக்க செய்வதால் ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவது மட்டுமில்லாமல் 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது என கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு எண்ணற்ற நன்மைகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுத்து கப்பலூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் சரக்கு மற்றும் பொருள்களை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை வைத்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யாமல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் சரக்குகளை ஏற்றி,இறக்க செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என சுமை தூக்குவோர் தொழிற்சங்கத்தினர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மகாதேவன் அவர்களும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.