
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்று நட்டு, இனிப்புகள் வழங்கிய திமுக நிர்வாகிகள் மதுரை மாநகர் மாவட்டம் சம்மட்டிபுரம் பகுதி கழகத்தின் சார்பாக வார்டு எண் 65, 70 ஆகிய வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று சம்மட்டிபுரம் பகுதி கழகச் செயலாளர் கே .தவமணி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டக் கழக செயலாளர்கள் பாலாஜி ,பாலசிவகுமார் மற்றும் பகுதிகழக நிர்வாகிகள் சுசிசெல்வம்,அ. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் வார்டு எண் 70 அவைத்தலைவர் பொன்ராமசாமி தலைமையில் சொரூப் நகர் பூங்காவில் 70 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கே. தவமணி, ஏ .மூர்த்தி, கே. தனசேகர் ,ராயல் சீனிவாசன் ,என். சேதுராமநாதன் ,கே. திருப்பதி மற்றும் மதுரை மாநகர்முன்னால் காவல்துறை ஆணையாளர் கணேசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.