கொடைக்கானல் வனப்பகுதியில், கடந்த சில தினங்களாக காலை நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவுவதால் செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து வருகின்றன. அங்குள்ள தனியார் தோட்டப்பகுதிகளில் சிலர் தீ வைத்து வருகின்றனர்.
இந்த தீ வனப்பகுதி, வருவாய்த்துறை நிலங்கள், தனியார் விவசாய நிலங்களுக்கு பரவி தொடர்ந்து எரிந்து வருகிறது.
இந்தநிலையில் கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை வனச்சரகத்துக்கு உட்பட்ட துப்பாக்கி மலை வனப்பகுதியில், நேற்று மாலை காட்டுத்தீ பற்றிக்கொண்டது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் அரியவகை மரங்கள், மூலிகைச்செடிகள் எரிந்து நாசமாகின.
மேலும் அங்குள்ள வனவிலங்களும் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தீ எரிந்து வருவதால், அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.