திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தை சேர்ந்த பாரி வள்ளல் அவர்களுக்கும் பொன்சுந்தரி அவர்களுக்கும் மகனாக பிறந்தவர் முத்து சுடர்.
முத்து சுடர் அவர்கள்,
கின்னஸ் உலக சாதனையாளரும், இசைக் கலைஞருமான டாக்டர். அப்துல் ஹலீம் அவர்களிடம் கடம், ஜெம்பே, உடுக்கை, டிரம்ஸ் போன்று தாள வாத்திய கருவிகளை கற்று பல உலக சாதனைகளை தனது இளம் வயதிலேயே சாதனை படைத்துள்ளார்.

இவரின் சாதனைகளை பாராட்டி குளோபல் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் சார்பில் 20.2.2022 அன்று சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்த விருது வழங்கும் விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்று வரும் முத்து சுடர் அதே கல்லூரியில் பி.எ வயலின் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முத்து சுடர் அவர்களுக்கு முனைவர் கண்டதேவி விஜயராகவன் அவர்கள் தலைமையில் பாராட்டு விழா சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வைத்து நடத்தப்பட்டது.
இசைக் கல்லூரி முதல்வர் முனைவர் தோப்பூர் சாய் ராம் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களும் முத்து சுடர் அவர்களை பாராட்டினர்.
இசை மேதைகளான முனைவர் திரு. கண்டதேவி விஜயராகவன், வலங்கைமான் அமிர்த ராஜ், திரு.அருண் ஆறுமுகம், தீபன் ராஜ் குமார் மற்றும் ரிச்சர்ட் அவர்களிடமும் இசை கற்று வரும் முத்து சுடர், இசையமைப்பாளர் டாக்டர். ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் இசைக் கல்லூரியான கே. எம். கன்ஸர்வேட்டரியில் டிரம்ஸ் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையில் உலக சாதனை படைத்து டாக்டர் பட்டம் பெற்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Thank you very much Sir