
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க தரப்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களமிறக்கி கூட்டணியிலிருக்கும் அனைவரும் அவருக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டங்கள், வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு என வேலைகளை முடுக்கியிருக்கின்றனர். கடந்த 31-ம் தேதி பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நடந்த பெருங்கோட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மூன்று விஷயங்கள் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டது.
ஒன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், இரண்டு பாதயாத்திரை, மூன்றாவதாக இந்த ஒன்றாம் தேதிலிருந்து பதினைந்தாம் தேதிவரை க்யூ ஆர் கோடு அறிமுகம் செய்து கட்சிக்கான நிதிவசூல் குறித்து பேசினோம். ஈரோடு தேர்தல் குறித்து பேசும்போது, ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க தேவையில்லாமல் தனது ஆற்றலைச் செலவு செய்ய வேண்டாம் எனக் கருகிறேன். இடைத்தேர்தலில் நாம் அக்கறை செலுத்த வேண்டாம். தேசிய தலைமையிடம் நமது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு இன்னும் இரண்டு நாள்களில் முறைப்படி நாம் அறிவிப்போம்’ என்று மாநிலத் தலைவர் பேசினார். கர்நாடகாவில் பசவரராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் வரும் மே மாதத்துடன் பாஜக அரசின் ஆட்சி காலம் முடிவு பெறுகிறது.தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் தற்போது பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அதேசமயம் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
Appointment:
இதையும் படிக்க: ஐகோர்ட் அதிரடி உத்தரவு: இந்திய குடிமகன் இல்லாதவருக்கும் வழங்க வேண்டும்… இலங்கைத் தமிழர்கள் மகிழ்ச்சி!
இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்து அக்கட்சி பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பத்து ஆண்டுகள் காவல் அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றிய நிலையில் அங்குள்ள அரசியல் சூழலை அவர் நன்கு அறிவார் என்பதால் அவருடைய பணி அனுபவம் தேர்தலில் பணியாற்ற கை கொடுக்கும் என்ற காரணத்தினால் அவர் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.