மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு பதில், உயிருடன் உள்ள அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்ததால் சலசலப்பு எழுந்தது.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், எஸ்.பி.பி மறைவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பி இறந்ததாக நினைத்து, அம்மாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் அவர், என்றும் ஜெயலலிதா மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக எதிர்கட்சியில் இருந்து குரல் கொடுத்தவர் என்றும் செல்லூர் ராஜூ கூறிய போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறுக்கிட்டு உயிரிழந்தது, பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் என தெளிவுபடுத்தினார். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட அவர், எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அட கடவுளே… கொடுமை