பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த திருப்பரங்குன்றம் தொகுதி MLA டாக்டர் பா. சரவணன்..

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த திருப்பரங்குன்றம் தொகுதி MLA டாக்டர் பா. சரவணன்..

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடு அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பேருந்து நிறுத்தத்தில் “பயணிகள் நிழற்குடை” இல்லாமல் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் பெரும் அவதிக்குள்ளாக வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் பா.சரவணன் அவர்களிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., டாக்டர் பா.சரவணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து இப்பகுதியில் நிழற்குடைகளை அமைத்து திருநகர் 3வது நிறுத்தம் மற்றும் ஐராவதநல்லூர் ஆகிய இரண்டு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

திருநகர் 3வது பேருந்து நிறுத்தம்
ஐராவதநல்லூர் பேருந்து நிறுத்தம்

உடன் பகுதி செயலாளர் உசிலை சிவா, வட்ட செயலாளர்கள் சுந்தர்ராஜன், திரு.சாமிவேலு, ஐராவதநல்லூர் வட்ட செயலாளர் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் இந்திரா காந்தி, பரமேஷ்வர பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!