
பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளார்கள்… உண்மையை உடைத்த சகோதரி… வைரல் வீடியோ!
இலங்கையில் தனி ஈழம் அமைக்க 30 ஆணடுகளுக்கும் மேல் போராடியவர் தேசியத் தலைவர் என்று போற்றப்படும் பிரபாகரன். கருணா, கேபி, இந்தியா உள்ளிட்ட சில வல்லரசுகளின் சதியால் இந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால் இதுகுறித்து இன்னும் பலத்த சர்ச்சை நிலவுகிறது. பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், மீண்டும் அவர் ஈழப்போரை நடத்த வருவார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இறுதிக்கட்ட போர் நடந்தபோது அவர்கள் இலங்கையில் இருந்து பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், வெளிநாடு ஒன்றில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் முன்னாள் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வரிடம் மற்ற எம்.பி.க்கள் இது தொடர்பாக மேலும் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர், பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பது எனக்கு உறுதியாக தெரியும் என்றார். ஆனால் பிரபாகரன் மனைவி, மகள், மகன் எந்த நாட்டில் உள்ளனர்? இந்த தகவல் எப்படி கிடைத்தது? என்பன போன்றவற்றுக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பின் அண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு உள்ளார் என செய்தியாளர் சந்திப்பில் பழ நெடுமாறன் பேசியிருந்தது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது. அதே போல் தற்போது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் மனைவி மதிவதினியின் சகோதரி கூறுகையில் கடந்த 2009 ல் நடந்த போரின் காரணமாக எனது தங்கை மதிவதினி, அவரது மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கம், ஊடகத்துைறை மூலம் செய்திகளை தெரிந்துகொண்டேன். கடந்த சில அண்மை காலமாக அவர்கள் உயிருடன் இருப்பதாக அறிந்துகொண்டேன். பின்பு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உணவருந்திவிட்டு வந்திருக்கிறேன். இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியோடு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். உண்மையிலயே இந்த செய்தி கடவுள் கொடுத்த கொடையாகத்தான் நினைக்கிறேன் என பேசிய காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.