BREAKING NEWS: 35 ஆயிரம் பேருக்கு சிகிச்சை.!! சிங்கப்பூரை மீண்டும் மிரட்டி வரும் கொரோனா..!! தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

35 ஆயிரம் பேருக்கு சிகிச்சை.!! சிங்கப்பூரை மீண்டும் மிரட்டி வரும் கொரோனா..!! தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்தன.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவானது. பணியாளர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் கொரோனா குறைந்து, படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 35,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 ஆயிரம் அதிகம் ஆகும். இதையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும்படி அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!