பிரான்ஸ் ராணுவம் விரைவில் வெளியேற்றம்
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக பிரான்ஸ் ராணுவம் முகாமிட்டிருந்த நிலையில், விரைவில் பிரான்ஸ் வீரர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக ஐவரி கோஸ்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக முகாமிட்டிருந்த பிரான்ஸ் வீரர்கள் விரைவில் வெளியேற்றப்பட உள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதியான Alassane Ouattara நேற்று அறிவித்தார்.
தங்கள் நாட்டு ராணுவம் தற்போது திறம்பட செயலாற்றும் நிலையில் உள்ளதாகவும், அதனால் பிரான்ஸ் வீரர்களை வெளியேற்ற ஐவரி கோஸ்ட் அரசு முடிவு செய்துள்ளதாகவும் Ouattara தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு ராணுவத்தை வெளியேற்றுவது குறித்து வேறு எந்தக் காரணத்தையும் வெளியிடாத ஐவரி கோஸ்டின் ஜனாதிபதியான Ouattara, திடீரென இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.