தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விரசிகாமணி எனும் ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகன் சிதம்பர வேல் பிரகாஷ் (28) இவருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது.கடந்த நவம்பர் மாதம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கனடா நாட்டிற்கு சென்று அங்குள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி செய்து வந்துள்ளார்.
3.7.2023 அன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஃபேர்லான் பவுல்வர்ட் மற்றும் ஹம்பர்வெஸ்ட் பார்க்வே பகுதிக்கு தனது வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே பெண் ஒட்டி வந்த கார் சைக்கிள் மீது மோதியதில் சிதம்பரவேல் பிரகாஷ்க்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. பின்னர் அவரை அருகே இருந்து மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்த பொழுது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி உடற்க்கூராய்வு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் சாலை விபத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த இவரது உடல் விரைவில் சொந்த ஊரான வீரசிகாமணி கிராமத்திற்கு கொண்டு வர தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பீல் பிராந்திய போலீஸ் சாரா பேட்டன் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
காரை ஒட்டி விபத்து ஏற்ப்படுத்தியவர் 30 வயதிற்குட்பட்ட பெண் என கூறப்பட்டுகிறது. காவல்துறையினரால் அடையாளம் காட்டப்பட்ட பெண் ஓட்டுநர் தவறான திசையில் சென்று மற்றொரு வாகனத்தையும் இடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். அந்த மோதலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஓட்டுநர் பின்னர் வாகனத்தை விட்டு வெளியேறி வேறு வழியாக நடந்து சென்றார் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் போலீசார் தெரிவிக்கவில்லைசம்பவ இடத்திலிருந்து வரும் படங்கள், சம்பந்தப்பட்ட வாகனம் மோசமாக சேதமடைந்ததைக் காட்டுகின்றன, அதன் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்துள்ளன. விபத்தை நேரில் பார்த்தவர்கள், இது குறித்து விபரம் தெரிந்தவர்கள் போலீஸாருக்கு தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.