திருச்சி: குடியரசு தினவிழா… ஆர்.சி பள்ளியில் கொண்டாடப்பட்டது.

நமது தேசத்தின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை பெற்றது. இதனைத் தொடர்ந்து நமது தேசத்துக்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்து இந்தியா முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்த நாள் 1950 ஜனவரி 26 ஜனவரி 26-ந் தேதி நாட்டின் குடியரசு தினம் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாத்தில் நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தேசிய கொடி ஏற்றினார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.

Also Read: தேசியக்கொடிக்கு சல்யூட் அடித்த யானை

அதே போல் திருச்சியில் உள்ள R.C மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவிற்கு பள்ளியின் தாராளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் பணி சின்னப்பன் அடிகளார் தலைமையேற்று நடத்தினார். இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சகாயராஜ் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை வழங்கினார். இவ்விழாவில் மாநில அளவில் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுடைய சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்புரையாக பள்ளி மாணவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்த விழாவில் காண ஏற்பாடுகளை பள்ளியின் பாரத சாரணர் ஆசிரியர் லூயிஸ் அவர்களும் மற்றும் ஆசிரியர் வின்சென்ட் அவர்களும் செய்தனர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பசுமை படை , செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள், வாழ்க சாரணர் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!