தவளை இறந்து கிடந்த ஐஸ்கீரீம் திண்ற குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை!

மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

மதுரை TVS நகர் அருகே கோவலன் நகர் பகுதியில் அமைந்துள்ள மணிமேகலை தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்பு செல்வம் – ஜானகி ஸ்ரீ தம்பதியினர். அன்புச் செல்வம் ஜானகி ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது நித்ரா ஸ்ரீ(வயது 8)., ராட்சன ஸ்ரீ(வயது 7) என 2 மகள்கள் ஒரு மகன் என 3 குழந்தைகள். அதேபோல சகோதரர் தமிழரசனுக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு தாரணி ஸ்ரீ(3) வயதில் ஒரு மகள் உள்ளனர்.. நேற்று குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் தைப்பூச தினத்தை முன்னிட்டு நேற்று கோயிலில் காலை சாமி தரிசனம் செய்தனர்.சாமி தரிசனம் முடிந்தபின் கோவில் அருகே இருந்த ஒரு சிற்றுண்டி கடையில் ஐஸ்கிரீம் வாங்கி குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர். அதில் குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று கிடந்தது இதை கண்ட குழந்தை நித்ரா ஸ்ரீ தந்தை அன்பு செல்வத்திடம் கூறவே உடனடியாக குழந்தையை அருகில் இருந்தால் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு சிறுமிகள் வாந்தியுடன் மயக்கமடைந்தனர்.

உடனடியாக 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களுக்கு அங்கு தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ‘சிற்றுண்டி கடையில் தவளை உயிரிழந்த நிலையில் கிடந்த ஐஸ்கிரீமை உண்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரிமில் தவளை இருந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி.காளமேகம்

மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!