
திருச்சி ஹீடு இந்தியா, கங்காரு கருணை இல்லம் மற்றும் ராணா டிஜிட்டல் இணைந்து நடத்தும் மாபெரும் உணவுத்திருவிழா புதன்கிழமை திருச்சி ஜங்ஷன் அருகாமையில் உள்ள ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. இந்த உணவுத்திருவிழா 28ம் தேதி துவங்கப்பட்டு மூன்று நாட்கள் முடிவடைந்து நான்காவது நாளாக இறுதி நாளை எட்டவுள்ளதால் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
உணவுத்திருவிழா
இது தொடர்பாக ராணா இயக்குனர் சி.ஆர். ராஜா கூறும்போது, இந்த உணவுத் திருவிழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை ஜிகர்தண்டா, கோவில்பட்டி கடலை மிட்டாய், அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாத உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பிரபலமான உணவுப்பொருட்களும் இங்கு கிடைக்கும். மேலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பிரபலமான உணவுகளை அதன் அசல் சுவையுடன் சுவைத்து மகிழ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் டி.வி. நட்சத்திரங்கள், திரை நட்சத்திரங்கள், காமெடி கிங் மதுரை முத்துவின் பட்டிமன்றம், பிளாக் பாண்டி மற்றும் ஆதவன் இணைந்து நடத்தும் பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது. மேலும் பெரியவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், குழந்தைகளுக்கு மாயாஜால 3 டி ஷோக்களும் நடைபெறுகிறது.
சிறப்பம்சமாக 360 டிகிரி ஸ்லோ மோஷன் செல்பி ஸ்டேட்டஸ் வீடியோ எடுத்து தரப்படுகிறது. குழந்தைகளுக்கான பேஷன் ஷோ, குழந்தைகள் பங்குபெறும் நடன நிகழ்ச்சி, பேன்சி டிரஸ் போட்டிகள், ரங்கோலி நடனப் போட்டிகள் நடைபெறு கிறது.
இந்த உணவு திருவிழா கலை நிகழ்ச்சிகள் பள்ளிக்குழந்தைகளுக்கு அனுமதி இலவசமாக்கப்பட்டு உள்ளது. பெரியவர்களிடம் ரூ.80 நன்கொடை பெறப்படுகிறது. அந்த நன்கொடை ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மறு வாழ்வுக்காக செலவிடப்பட உள்ளது என குறிப்பிட்டார். காலை 11மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை காண மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக இங்கு வரக்கூடிய பொதுமக்கள் பராம்பரிய உணவு வகைகளை வாங்கி செல்வது மட்டுமின்றி அது தொடர்பான தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலை முதல் பொதுமக்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் என்பதும் நடைபெற்று வர அந்த கலை நிகழ்ச்சிகளை இளைஞர், பெரியவர்கள் என வித்தியாசமின்றி அனைவரும் கண்டு ரசித்து கொண்டிருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் தெரிவிக்கக்கூடிய கருத்தானது பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த உணவு வகைகள், நெல் வகைகள், தானிய வகைகள் மற்றும் இதன் மூலம் சமைக்க கூடிய உணவு பொருட்கள் இது குறித்த கருத்து பரிமாற்றங்கள் என்பது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கு வரக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.ஒரே இடத்தில் அனைத்து விதமான உணவுப் பெருட்கள் கிடைப்பதால் அதனை ருசி பார்த்துவிட திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களும் தயாராகிவிட்டார்கள். எனவே நாளை இறுதிநாள் என்பதால் உணவுத் திருவிழாவானது களை கட்டியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.