திருப்பரங்குன்றம் அருகே நேற்று நிலையூர் 2-வது பிட் ஊராட்சி கருவேலம்பட்டி கிராமத்தில் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நிலையூர் முருகன் (அ.தி.மு.க.), திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் வேட்டையன் (தி.மு.க.) ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசினை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தி.மு.க., அ.தி.மு.க.வினரும் கலந்துகொண்டனர். ஒரே விழாவில் ஒரே மேடையில் தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.