
அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெறும்.
இந்நிலையில் நேற்று கடந்த இருதினம் (19.01.23) அன்று உண்டியல் எண்ணும் பணியில் கோயில் இணையணையாளர் சுரேஷ் ,அழகர் கோவில் இணை ஆணையாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 43,76,178 ரூபாய் ரொக்கமும்,95 கிராம் தங்கமும், 1கிலோ 615 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மொத்தம் 42 உண்டியல்கள் உள்ளன
இதில் யானை பராமரிப்பு பணி மற்றும் அன்னதானத்திற்காக இரண்டு உண்டியல் போக மீதம் உள்ள 40 உண்டியல்கள் பக்தர்களின் காணிக்கையை பெற்று அதை எண்ணி முடித்தது வங்கியில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வரும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உண்டியல் கணிக்கை எண்ணும் பணிக்காக ஊழியர்கள் கோயில் உள்ள அனைத்து உண்டியலில் திறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் வாசலில் லட்சுமி விலாஸ் வங்கியால் வழங்கப்பட்ட உண்டியல் எண் 8ன் சாவியை அறநிலைத்துறை ஊழியர்கள் தொலைத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து உண்டியலை என்னும் பணிக்காக திறப்பதற்கு பல்வேறு முயற்சியில் ஈடுபடும் சாவி கிடைக்காததால் மாற்று சாவியை டூப்ளிகேட் சாவியை தயார் செய்து உண்டியலை திறந்தனர்.
இதனால் 3 மணிநேர தாமத்திற்கு பின் கோவில் வாசலில் உள்ள உண்டியல் எண் எட்டை (8) மாற்று சாவி மூலம் திறந்து எண்ணும் பணியில ஈடுட்டனர்.
திருக்கோவில் அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் உண்டியல் சாவி தொலைந்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
உண்டியல் சாவியில் அதிகாரிகள் லட்சியமாக இருப்பது போல் கோவிலில் பாதுகாப்பு விசயங்கள் கேள்விகுறியை எலுப்பிபுள்ளது.
அஜாக்கிரதையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை என ஆதங்கத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.