
திருப்பரங்குன்றம் பசுபதிநாதர் சிவன் திருக்கோயிலில் அன்னபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மதுரை திருப்பரங்குன்றம் பசுபதிநாதர் சிவன் திருக்கோயிலில் அன்னபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சஷ்டி மண்டபம் அருகே அமைந்துள்ள பசுபதிநாதர் சிவன் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஏராமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அன்னத்தை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம். பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் சஷ்டி மண்டபம் அருகே உள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு பசுபதிநாதர் சிவன் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, லிங்கத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அன்னம் சாத்துபடி செய்து சர்வ அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 108 மூலிகை அபிஷேத்தில் இருந்து பெறப்பட்ட பிரசாதம் நாள்பட்ட உடல் நோய் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்பதால்
ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.