பொதுச் செயலாளராகிறாரா சீமான்!

தமிழக அரசியலிலே திராவிட கட்சிகளை கடுமையாக எதிர்த்தவர் எதிர்த்து வருபவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் என்றால் அது மிகை ஆகாது விடுதலைப் புலிகள் கட்சி என்பதை தாண்டி இனி தமிழக அரசியலின் தேசிய கட்சி என்கிற பக்குவ நிலைக்கு சீமான் வந்துவிட்டார் என்பதை உணர்ந்து அரசியல் நிலைப்பாடுகளில் தனது சொற்றொடர்களில் பல விசயங்களை மாற்றிக் கொண்டாலும் கூட நாம் தமிழர் கட்சிக்கு என்று கட்டமைப்பு இல்லாதது கட்சிக்கு பின்னடைவு என்பதைத் தாண்டி வாக்கு வங்கி ஏற்ற நிலையில் இருந்தாலும் நிரந்தர கட்டமைப்பை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஏற்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் நாச்சியாபட்டி,லெக் குடிப்பட்டி மலையடிப்பட்டி,கலியாபட்டி போன்ற பகுதியில் ஒருவர் கூட கட்சி உறுப்பினராக இல்லை. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஒன்றிய இளைஞரணி, மாணவரணி,மகளிர் அணி யார் என்று தேட வேண்டியுள்ளது. வெங்கங்குடி ஊராட்சியில் பதவியில் எவருமில்லை. பரந்துபட்டு இருக்கிறவர்களை ஓரணியில் ஒரு இடத்தில் கூட்டம் கூட்டுவதால் கட்சி வளர்ந்து விட்டதாக அர்த்தமில்லை.

நாம் தமிழர் கட்சியில் மாவட்ட ஒன்றிய செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் சீமானுக்கு உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை ஆராய்வதை விட அதை தாண்டி அதிகாரப் பதவி ஆளுமை பதவி என்பது ஒருங்கிணைப்பாளர் பதவியை வைத்துக்கொண்டு வலிமையான அரசியல் செய்ய முடியாது.
தமிழக அரசியலில் ஆளுமை பதவி என்றால் தலைவர் என்பதை தாண்டி பொதுச்செயலாளர் என்ற பதவி தான் ஆளுமை பதவிதான் அதிகாரப் பதவி தமிழக அரசியலில் எடுபடுகிறது.

ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி ஒருங்கிணைப்பு தோடு அவரது ஆளுமையை பதவி என்ற அரசியல் சித்தாந்தத்திற்குள் வராது என்றும்,பொதுச் செயலாளர் என்ற பதவி அதிகாரம் சீமானுக்கு வராதவரை கோவை கல்யாணசுந்தரம் ராஜீவ்காந்தி மட்டுமல்ல திருச்சி வினோத் முதற்கொண்டு கட்சியை விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் என்பது சீமானுக்கு எடுத்துச் சொல்வதற்கு யாரும் இல்லையா? அல்லது சீமான் அவர்களிடம் சொல்வதற்கு யாருக்கும் தைரியம் இல்லையா? யார் சொன்னாலும் கேட்க மாட்டாரா? என்ற குழப்பம் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களின் கருத்தாக உள்ளது.

பொதுச்செயலாளர் என்று அதிகாரத்திற்குள் சீமானால் வர முடியாது எனில் தமிழக அரசியலில் அவ்வளவு எளிதில் எம்.எல்.ஏ க்களை பெற முடியாது என்பதற்கு ஆதாரமாக அதிமுகவை சீமான் நன்றாக உற்றுக் கவனித்தால் புரியும் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் ஆளுமையான பதவியில் இருந்தார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பதவியிலே சில நாட்கள் இருந்தாலும் ஆளுமையோடு இருந்தார். டெல்லி தர்பார் சதியால் சிறை சென்றார் என்று வி.கே சசிகலா வின் ஆதரவாளர்கள் கருத்தாக உள்ளது. அதிமுகவை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்ற இபிஎஸ் ஓபிஎஸ் போன்றவர்கள் அறிவித்துவிட்டு இபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் என்று அறிவித்த நாள் முதல் அதிமுகவின் கழக அதிகாரம் இல்லாமல் இரட்டை குழல் துப்பாக்கியாகவும், ஒரு உறைக்குள் இரண்டு கத்தி போன்ற நிலையில் அதிமுக தடுமாறுகிறது.

அதனால்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு வரவேண்டும் என்று பல ஆயிரம் பேர் பணத்தை வாரி இறைத்து செலவு செய்து வருகிறார்கள்.

மேற்படி எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியிலோ நேர்வழியிலோ எது எப்படியோ பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்திற்கு வருவதை உறுதி செய்ய முடியாது. வி.கே.சசிகலா அவர்கள் சிறையிலிருந்து வந்ததும் ஓபிஎஸ் முதல் கொண்டு ஓடி சின்னம்மா.. சின்னம்மா.. என்று தஞ்சம் அடைவார்கள் என்று கற்பனையில் இருந்ததை அடுத்து இன்று வரை எந்த எம்.எல்.ஏ களையும் வி.கே.சசிகலாவிடம் நெருங்காமல் பார்த்து கோடிகோடியாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதற்கொண்டு மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியில் உள்ள பலருக்கும் கோடி கோடியாக கொட்டி கொடுக்கிறார்கள் என்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற ஆளுமை பதவியை பிடிக்க பலகோடி இழந்தாலும் கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என்ற இடத்தை அடைந்தே தீருவார் என்று எடப்பாடி தரப்பு மட்டுமல்ல பொதுமக்களும் பேசிக் கொள்ளும் அளவுக்கு எடப்பாடி உறுதியாக உள்ளார் என்பதை மறுக்கமுடியாது.

ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி ஒருங்கிணைப்பதோடு முடிவுக்கு வரும்.ஆனால் அதிகார ஆளுமை பதவி என்பது பொதுச் செயலாளர் பதவி தான் என்பதை நாம்தமிழர் கட்சியில் உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.சீமான் அதிகாரப் பதவிக்குள்இல்லை என்று யார் சொன்னது என்று நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் வேம்பு பேசலாம்

ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எப்படி அதிகாரம் இல்லை என்று தமிழக மக்கள் கருதுகிறார்களோ, அதே போல தான் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற அதிகாரப் பதவியில் சீமான் வராதவரை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வரை கட்சி கட்டமைப்பை வளர்க்க முடியாது.

கழகத்தின் தலைவர் பதவிக்கு ஆளுமை பதவி கிடையாது. அந்த கட்சி வளர்ச்சி அடைவது எளிது அல்ல என்பதற்கு சான்று காங்கிரஸ், பாஜக போன்ற காட்சிகளை ஆய்வு செய்தாலே புரியும். மாவட்ட தலைவர் என்ற பதவியை விட மாவட்ட பொதுச் செயலாளர் பதவிக்கு தான் ஆளுமை சக்தி அதிகம் உண்டு என்று மாவட்ட தலைவர் பதவியை விட மாவட்ட செயலாளர் பதவிக்கு பாஜகவினர் அதிகம் விரும்புகின்றார்கள்.உண்மைச் செய்திகளை பொதுமக்கள் கருத்துக்களை சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை கூடுதலாக நாம் தமிழர் கட்சியின் மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கருத்துக்களை சுட்டிக் காட்டி விட்டோம்.
இதனை ஒரு கணம் சிந்தித்து ஆராய்ந்து களமிறங்கி பொதுச்செயலாளர் என்று அதிகாரப் பதவிக்கு வருவாரா?

source: ழகரம் இதழ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!