குடியரசுத் தலைவரின் வருகைக்காக மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிய சம்பவம்… தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சியினர்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 18-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வரும் அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.

வரும் 19-ம் தேதி கோவையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத் தலைவரான பின்னர் திரவுபதி முர்மு முதல்முறையாக தமிழகம் வருவதால் கோவையில் தற்போதே கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்து இருக்கின்றனர். மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கோவை மாநகரில் 1,000 போலீசாரும் புறநகர் பகுதிகளில் 5000 போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பிப்., 18ம் தேதி மதுரைக்கு குடியரசுத் தலைவர் வரும் நிலையில் டிரோன் கேமிரா பறக்கத்தடை விதித்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை வரவேற்பதற்காக அவனியாபுரம் பகுதியில் சாலையோரம் இருந்த மரங்களை பசுமைக்குழுவின் ஒப்புதல் இன்றியும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றியும் நூற்றுக்கணக்கான மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா அவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டதை தடுத்து நிறுத்தினர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மரங்களை வெட்டப்பட்டதை தடுத்து நிறுத்திய நாம் தமிழர்கட்சியினரை இப்பகுதி மக்கள் உட்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!