
தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் முறை குறித்தும், அனைத்து பொருட்களும் நல்லமுறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா, என்பது குறித்தும் கலெக்டர் செந்தில்ராஜ் பணியாளர்களிடம் விரிவாக கேட்டறிந்து பொதுமக்களுக்கு தடையின்றி அனைத்து ரேசன் பொருட்களும் நல்லமுறையில் வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கியில் அப்பகுதியில் உள்ள தாளமுத்து நகர், சவேரியார்புரம், பூப்பாண்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார வியாபார பிரமுகர்கள் தொழில் கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்திருந்தனர். தொழில் கடன் பலருக்கும் வழங்கப்பட்டு, இந்த வங்கியின் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாத தொழில் கடனாக 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் காசோலையை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
விழாவில், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அலுவலர் அபுல் காசிம், தாசில்தார் செல்வக்குமார், குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் ஜஸ்டின் செல்லதுரை, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி செயலாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, சேசுராஜா, கணபதி நகர் கிளைசெயலாளர் ராஜா, கௌதம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட கூட்டுறவு வங்கி மற்றும் ரேசன் கடை பணியாளர்கள் உடனிருந்
தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.