தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட சண்முகபுரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு அடிப்பம்பு அமைக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அடிபம்பு பழுதானதால் அதில் பாகங்களை பேருராட்சி நிர்வாரத்தினர் எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து பேருராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கேட்டபோது அதில் சாலை மற்றும் வாறுகால் அமைக்கப்பட உள்ளது. அவை அமைக்கப்பட்டவுடன் அடிபம்பு சீர்படுத்தி தரப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் சாலை, மற்றும் வாறுகால் அமைக்கப்பட்டு 3மாதத்திற்கு மேலாகியும் அடிப்பம்பை சீரமைத்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இந்நிலையில் அடிப்பம்பை சீர்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததை கண்டித்தும், அடிப்பம்பை மாட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி பொதுமக்கள் அடிப்பம்புக்கு நூதனமாக மலரஞ்சலி செலுத்தினர். இந்த நூதனப் போராட்டத்தால் பேரூராட்சி அதிகாரிகள் அதிர்ந்து போனதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.