
மரத்தில் தொங்கிய காகம்… நாம் தமிழர் நிர்வாகி செய்த அந்த செயல்.! வைரல் வீடியோ
பெறுமதியான மனித உயிர்களையே கவனத்தில் கொள்ளாத இன்றைய நாட்களில் சிறிய காகத்தின் உயிரை பெரிதென மதித்து காப்பாற்றிய சம்பவம் பெறும் வரவேற்பை பெற்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த ராயகிரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் இவர் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். நேற்று காலை அப்பகுதியில் உள்ள மரத்தில் நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய நிலையில் தவித்துக்கொண்டிருந்ததை கண்டுள்ளார். மரத்தில் காகம் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது குறித்து அருகிலுள்ள ஊர் மக்களிடம் கூறி டிராக்டர், கோக்காலி ஏணி, வாங்கு அரிவாள் கம்புகளின் உதவியுடன் மரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை மீட்டு முதலுதவி அளித்தனர்.
உரிய நேரத்தில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் காகத்தை மீட்க உதவிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.