- 100க்கும் மேற்பட்டோர் திரண்டு பள்ளிக் கூடத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் சீரமைக்க பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
92 பள்ளி மாணவர்கள்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வண்டாரி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளிக்கு அப்பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 92 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளிக்கு சில வருடங்களுக்கு முன்பாக புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன அப்போது வகுப்பறைக் கட்டிடங்கள் தரமில்லாமல் கட்டப் பட்டதால் கட்டிடங்கள் பழுதடைந்தது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
இதையடுத்து இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் திரண்டு பள்ளிக் கூடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதுவரை இப்பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள ஊராட்சி சமுதாய கூடத்தில் வகுப்பறை நடத்த சொல்லி ஆசிரியர்கள் மத்தியில் கூறிவிட்டு சென்றனர்.
நடவடிக்கை:
ஆனால் மூன்று மாத காலமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளியை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் & சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.