
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள், புதுவையில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. அந்தந்த கட்சிகளின் அரசியல் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் , முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் 40 தொகுதிகளில் 20 ஆண்கள், 20 பெண்கள் என வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அவரது கடந்த முறை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தல் போட்டியிருந்தது. இதனால் இந்த முறையும் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த சின்னம் கிடைக்கவில்லை .
தேர்தல் ஆணையமும் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் அதை தரவில்லை. இதையடுத்து சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சீமானோ, தனது கட்சிக்கு படகு, பாய்மரம் ஆகியவற்றில் ஒரு சின்னத்தை ஒதுக்கக் கோரியது. ஆனால் அதையும் தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் மைக் சின்னத்திலேயே போட்டியிடுவதாக சீமான் அறிவித்தார்.
இதையடுத்து அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதில் மைக் இல்லாமல் யாருமே பேச முடியாது என தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த நிலையில் அவர் சிவகங்கை தொகுதி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து காரைக்குடியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் தற்போது அரசியல் மலிவான வியாபாரமாக மாறிவிட்டது. தமிழ் பிள்ளைகள் நாங்கள் மலிவான அரசியலை செய்ய மாட்டோம். அதனால்தான் நாம் தனித்து போட்டியிடுகிறோம். கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு தேர்வு வைப்பது போல் எம்பி, எம்எல்ஏ, முதல்வர், பிரதமர் ஆகவும் தேர்வு வைக்க வேண்டும்.
முக்கிய பதவிகளுக்கு தேர்வு வைத்திருந்தால் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முக்கிய பதவிகள் கிடைத்திருக்காது. ஓட்டு என்பது வலிமையான ஆயுதம். இதுவரை செலுத்திய ஓட்டு உங்களுக்கு என்ன தந்தது என்பது எண்ணி பார்த்துவிட்டு வாக்களியுங்கள் என சீமான் பேசி வருகிறார். இந்த நிலையில் பிரிட்டன் பாராளுமன்றம் முன்பு தமிழ்நாட்டில் நாம்
தமிழர் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி
சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு ஒன்று கூடிய உலக தமிழர்கள் பேசியதில் ஈழத்தில் நடந்தது தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்க நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்யவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.