நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு நெருக்கடி… அச்சத்தில் ஆளுங்கட்சி! விஜய் மக்கள் இயக்கத்தினர் குற்றச்சாட்டு.

நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுக்கு நெருக்கடி தரும் வகையில், அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள், அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட, போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.அம்பேத்கரின், 132வது பிறந்த நாள் விழாவை, தமிழகம் முழுதும் கொண்டாடுமாறு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, அதன் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து, இயக்க நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்த, போலீஸ் அனுமதி கேட்டு, மனு கொடுத்துள்ளனர்.சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, உடனே அனுமதி வழங்காமல், ‘நாளை வாருங்கள், பார்க்கலாம்’ என, போலீசார் பிடி கொடுக்காமல் பேசி அனுப்பி வைத்துள்ளனர். சில மாவட்டங்களில், தாங்கள் சொல்லும் நேரத்தில் தான் மாலை அணிவிக்க வேண்டும் என, நிபந்தனை விதித்துள்ளனர்.

வட மாவட்டங்களில், ஆளும் கட்சி அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களின் வாய்மொழி உத்தரவை தொடர்ந்து, அனுமதி தராமல் இழுத்தடித்துள்ளனர்.விஜய் மக்கள் இயக்கத்தினர், தலித் சமுதாய ஆதரவை பெறும் நோக்கில், அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட முன்வந்துள்ளனர்.

அது தங்களின் ஓட்டு வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற அச்சத்தில், ஆளும் கட்சி தரப்பில் முட்டுக்கட்டை போடப்படுவதாக, விஜய் மக்கள் இயக்கத்தினர் குற்றம்

சாட்டுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!