
காவல் துறையினர் வைக்கப்படும் அறிவிப்பு பலகையை தமிழில் வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை
மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து இடையூறு ஏற்படும்
இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்கிற காவல் துறையினரின்
அறிவிப்பு பலகைகள் ஆங்கிலத்தில் NO PARKING என்று வைக்க பட்டு இருப்பது
பெரும் வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்
இல்லாததையும் தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிவை நோக்கி செல்வதையும்
இது உறுதிப்படுத்துகிறது. Take diversion திசை திருப்பவும் அல்லது மாற்று
பாதையில் செல்லவும் என்கிற அறிவிப்பு பலகைகளிலும் தமிழ் சொற்களே
இல்லாதது போன்று ஆங்கிலத்தில் காவல்துறையினர் அறிவிப்பு பலகைகள்
வைப்பது தமிழ் மொழிக்கு ஏற்படும் பெரும் அவலம்.
ஆதலால் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள NO PARKING, Take diversion என்கிற அறிவிப்பு
பலகைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம், திசை திருப்பவும் அல்லது
மாற்று பாதையில் செல்லவும், என்று காவல்துறையினரின் அறிவிப்பு
பலகைகளில் தூய தமிழில் வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம்
தொகுதி தமிழ் மீட்சி பாசறை செயலாளர் வினோத் அவர்களின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.