அதிமுக, பாஜக, அமமுக, நாம் தமிழர் உள்பட அனைவரும் திடீரென வாபஸ்… போட்டியின்றி தேர்வான திமுக! நடந்தது என்ன.?

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை 1 வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் அதிமுக,திமுக, பாஜக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையில் 11 பேர் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கட்சியின் அங்கீகார கடிதம் இல்லாமல் மனு தாக்கல் செய்திருந்தார் இதனால் அவர் சுயேச்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். இதையடுத்து வருகின்ற 9ம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், அமமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் அதிகாரிையை சந்தித்து தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதுகுறித்து பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் திமுக ஜெயிக்க வேண்டும் என எண்ணி தனது ஆளுங்கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் வாங்க வைத்துள்ளனர் என அரசியல் விமர்ச்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த 11 பேரில் திமுகவை தவிர மீதமுள்ள 10 பேரும் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இந்த தகவல் எதிர்கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்ததுமட்டுமில்லாமல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!