அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு!
“தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்”
“விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்”
“தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்”
“முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”
“இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை; மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள மாமன்னன் படமே எனது கடைசி திரைப்படம்”
என தற்போது பதவி ஏற்ற பின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கோட்டையில் தனக்கான இருக்கையில் அமர்ந்து அலுவலக பொறுப்பை ஏற்றுக் கோப்புகளில் கையெழுத்திட்டார் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
புதிய அமைச்சருக்கு வாழ்த்து:
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலாளராக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் நியமனம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
✍️”2019, 2021 தேர்தலில் கூட்டணி வெற்றிக்குப் பாடுபட்டவர்; அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவார்” – முத்தரசன்.
✍️”முதலமைச்சர் போலவே உதயநிதியும் நற்பெயர் எடுப்பார்” – கோபண்ணா.
✍️”இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”
கனிமொழி, திமுக எம்.பி
10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்:
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
வனத்துறை அமைச்சராக இருற்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு
சி.வி.மெய்யநாதனுக்கு சூற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு இலாகா ஒதுக்கீடு
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கீடு
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.