மலேசியாவில் தமிழ்த் தொழிலாளர்களின் உரிமை மீட்புக்குப் போராடியவர்க்கு சென்னையில் நினைவேந்தல்!

மலேசியாவில் தமிழ்த் தொழிலாளர்களின் உரிமை மீட்புக்குப் போராடிய மாவீரன் “மலேயா கணபதி” – 75ஆம்நினைவேந்தல் மற்றும் நூல் அறிமுக விழா!

மலேசியாவில் தமிழ்த் தொழிலாளர்களின் உரிமை மீட்புக்குப் போராடிய மாவீரன் “மலேயா கணபதி” – 75ஆம்நினைவேந்தல் மற்றும் நூல் அறிமுக விழா!

மலேசியாவில் தமிழ்த் தொழிலாளர்களின் உரிமை மீட்புக்குப் போராடியதால், மலேசிய அரசால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட மக்கள் போராளி மலேயா கணபதி (எ) எஸ்.ஏ. கணபதி அவர்களின் 75ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நூல் அறிமுக விழா, வரும் 06.05.2023 அன்று சென்னையில் நடைபெறுகின்றது.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், சென்னை கலைஞர் கருணாநிதி நகர், (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) டிஸ்கவரி புக் பேலஸ் – பிரபஞ்சன் அரங்கத்தில் தி.பி. 2054 சித்திரை 23 – 06.05.2023 – காரி (சனி) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வுக்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர் தலைமை தாங்குகிறார்.

பாவலர் ஏ. பிரகாசு பாரதி (த.க.இ.பே.) வரவேற்புரையாற்றுகிறார். இயக்குநர் இரா.மு. சிதம்பரம் (எ) ராசின் எழுதியுள்ள “மலேயா கணபதி (எ) தமிழ் கணபதி” நூலை அறிமுகப்படுத்தி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் . கதிர், இயக்குநர் . சி. ஜெ. பாஸ்கர், இயக்குநர் . எம். ஆர். பாரதி ஆகியோர் உரையாற்றுகின்றனர். நூலாசிரியர் இயக்குநர் இரா.மு. சிதம்பரம் ஏற்பரை வழங்குகிறார். இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார். அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்க, த.க.இ.பே. பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன் நன்றி கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!