திருநகர் அண்ணா பூங்காவில் அறிவியல் பூங்கா – அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருநகர் அண்ணா பூங்காவில் அறிவியல் பூங்கா – அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மதுரை திருநகரில் இரண்டரை கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் அடிக்கல் நாட்டினார்

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் அண்ணா பூங்காவில் ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி இயக்குதல் மற்றும் பராமரிப்பு பற்றாக்குறை மானியத்தின் நிதி உதவியின் ரூபாய் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரத்து 570 ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான நிதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பூங்காவில் அறிவியல் தொழில்நுட்பம் கணிதம் பொறியியல் தொடர்புடைய வெளிப்புற சாதனங்கள் ஜி எஸ் எல் வி ராக்கெட் மாதிரிகள் ரசாயனம் உயிரியல் கணிதம் தொடர்புடைய கோட்பாடுகள் உள்ளிட்டவைகள் நிறுவப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உறுப்பினர் சுவேதா சத்யன் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர் ஆன உசிலை சிவா முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் மண்டல தலைவர் சுவிதா விமல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல் பூங்காவின் பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கீழக்குயில்குடி வி ஆர் செல்வந்திரன், மேற்கு மண்டல உதவி ஆணையர் பார்த்தசாரதி, செயற்பொறியாளர் இந்திரா தேவி, உதவி பொறியாளர்கள் தியாகராஜன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!