
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பரங்குன்றம் அருள்மிகு முருகன் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடக்கம்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆண்டுக்கு மூன்று முறை கொடியேற்றம் மூன்று முறை சூரசுந்தரம் நடைபெறும் சிறப்பு வாய்ந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு என சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம்.
இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும் வழக்கம்.
இவ் விழாக்களில் மிக முக்கியமானது பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பங்குனி பெரு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு சுப்பிரமணிய சுவாமி முன்னிலையில் பங்குனி பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மா இலை, தர்ப்பைப்புல், பூ, குங்குமம் சந்தனம் கொண்டு தங்கம் முலாம் பூசப்பட்ட கொடி கம்பம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழாவினை ஒட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், அன்ன வாகனம் மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 16ஆம் தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். (திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் மூன்று சூரசம்ஹார லீலை நடைபெறும்
ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா, கார்த்திகை தீப திருவிழா,பங்குனி பெருவிழா ஆகிய 3 விழாக்களுக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்)
தொடர்ந்து 17ஆம் தேதி4 மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் பிரியாவிடை முன்னிலையில் பகல் 12 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19ஆம் தேதி காலை 6 மணி அளவில் மலையை சுற்றி கிரிவலம் வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறுகிறது.
பங்குனிப் பெருவிழா முன்னேற்பாடுகளை அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.