
திருமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் தலையில் அம்மிக் குழவியை போட்டு கொலை!
திருமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை – சகோதரர் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை.
(விஏஓ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு)
மதுரை மாவட்டம் திருமங்கலம் பானு தியேட்டர் அருகே வசித்து வரும் உரப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி (45) – க்கும், திருமங்கலம் முகமதுசாபுரம் தெருவை சேர்ந்த சம்ரத் பீவி (42) சம்ரத்தீவி இடப்பிரச்சனை ஒன்று இருப்பது அதை முடித்து தாருங்கள் என விஏஓவிடம் கேட்டுள்ளார்கள் இதற்கு இடையில் நீண்ட நாட்களாக இட பிரச்சனை முடியாததால் இவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது மகன் ரபீக் ராஜா உள்ளதை கண்டு, விஏஓ முத்து பாண்டியின் வீட்டிற்கு நள்ளிரவு சென்று ரபிக் ராஜா மற்றும் அவரது 15 வயது சகோதரர் ஆகிய இருவரும் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து, முத்து பாண்டி மீது தலையில் போட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் துறையினர் சம்ரத் பீவியின் மகன்கள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.