
இரண்டு மகள்களை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை!
மதுரை மாவட்டம் முடக்கத்தான் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கோபி பிரகாஷ் வயது 40 இவர் எலக்ட்ரீஷியன் ஆக பணியாற்றி வருகிறார் இவர் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மிகுந்த மன வேதனையில் இருந்த கோபி ராஜ் தனது பத்து வயது மற்றும் ஐந்து வயது மகள்களை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, கோபிராஜ் மின் விசிறியில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கூடல் புதூர் போலீசார் மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது முடக்கத்தான் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.