திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: மதவெறி அரசியல் இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.!

திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: மதவெறி அரசியல் இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும், முருகனுக்கு தமிழில் மட்டுமே அர்ச்சனை நடத்த வேண்டும் மற்றும் அறநிலையத்துறை முடிவுகளில் மதவெறி அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன், விசிக மண்டல செயலாளர் மாலின், மாவட்ட செயலாளர் காளிமுத்து, மக்கள் அதிகாரம் நடராஜன் பல்வேறு அமைப்புகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!