
ரயிலில் இருந்து தவறி விழுந்து காவலர் உயிரிழந்த பரிதாபம்!
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று காலை சென்னையிலிருந்து வந்த ரயிலில் மதுரை விராதனூரை சேர்ந்த காவலர் தினேஷ் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தினேஷ்குமார் சென்னையில் வேலை பார்ப்பதாகவும் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான மதுரை வீராதனூர் வந்தபோது சோழவந்தான் அருகே ரயில் வந்த போது ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் உடல் துண்டு துண்டாகி சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவலின் பேரில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் காவலர்கள் தினேஷ் குமார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் தவறி விழுந்து அடிபட்டு காவலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.