மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட நிலையூர் முதல் ஊராட்சியில் நேற்று ஊராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.இந்த நிலையில் ஊராட்சி செயலர் அஜண்டாவின் படி தீர்மானத்திற்கு பொருள் குறித்து வாசித்தார். இந்த நிலையில் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை கட்டணம் செலுத்துவது தொடர்பு குறித்து விவாதிக்கப்பட்டது அதில் குடிநீர் நாள்தோறும் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வரும் நிலையில் இரண்டு லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பில் அனுப்பப்பட்டு பணம் கட்ட சொல்லப்படுகிறது. இது தொடர்பாக உதவி பொறியாளரிடம் பலமுறை கூறியும் தொடர்ந்து சப்ளைக்கு மாறாக பில் கூடுதலாக வருகிறது இதில் முறைகேடு உள்ளது அதனால் ஊராட்சி பொதுநிதி வீணாகிறது காவிரி கூட்டு குடிநீர் வினியோகத்தில் முறைகேட்டை கண்டிப்பதாக ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர் இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் கூறுகையில் சப்ளை செய்யப்படுவது 70 ஆயிரம் லிட்டராக இருப்பினும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக பணம் கட்டச் சொல்லி இருப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.