சபரிமலைக்கு போறீங்களா? அப்ப கட்டாயம் இதை செய்யுங்க… 670 கி.மீ பாதயாத்திரை பிரச்சாரம்! நெகிழ வைத்த ஐயப்ப பக்தர்.

சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டம் காக்காளுரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் 29 நாட்களில் 670 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து, சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஒருவர் தன் வாழ்கையில் எத்தகைய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் இறை பக்தியுடன் வாழ்ந்தால் அவர் வாழும் தருனங்கள் அனைத்தும் எல்லையில்லா ஆனந்ததையும் மன நிறைவையும் உணர்வார்.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் பக்தி அனைவரும் அறிந்ததே. நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்களின் பக்தி தனி சிறப்புடையது.
இந்நிலையில் சபரிமலையில் ஒரு தீவிர அய்யப்ப பக்தரின் பக்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காக்காளூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் “சபரிமலை தூய்மை காப்போம், ஒரு மண்டலம் விரதம் இருப்போம்” என தனது முதுகில் மாட்டியிருந்த பையின் மீது பேனரை கட்டிக் கொண்டு 29நாட்கள், 670 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நேற்று முன்தினம் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார்.

“இது எனக்கு முதன் முறை அல்ல 28 முறை சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்துள்ளேன். ஆனால் நடைபயணமாக சென்றது இதுவே எனக்கு முதல்முறை. ஐயப்பனின் பரிபூரண அருளால் எனது பயணம் சிறப்பானதாக அமைந்தது.
உலக நன்மைக்காகவும், பல துன்பங்களில் இருந்து மக்கள் அனைவரும் விடுபட வேண்டும், சபரிமலை தூய்மை காக்க வேண்டியும், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து வரும் சாமிமார்கள் அவர் அவர்களின் இஷ்டத்திற்கு ஏற்ப விரதம் இருந்து வருகின்றனர் ஆனால் 48 நாள் அதாவது ஒரு மண்டலம் விரதம் இருந்தால் தான் உரிய பலன் கிடைக்கும் எனவே 48 நாள் விரதம் இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த புனித யாத்திரையை மேற் கொண்டேன்.

என் தரிசனத்திற்கு உதவிய தமிழ்நாடு ஐயப்பா சேவா சங்கத்தினருக்கும், தமிழ்நாடு மற்றும் கேரளா காவல்துறையினருக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கும் மற்றும் எனக்கு பல விதங்களில் உதவிய முகமறியா நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்” என்று ஜெயக்குமாரின் உன்னத பக்தரின் வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.