
கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாற்றம் பெயரளவுக்குத்தான் என்றும், நகரத்தின் அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், கடந்த பிப்ரவரி மாதம் 52 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இதர மாநகரங்களில் உள்ள அளவுக்கு இங்கு மக்கள் தொகை இல்லை என்றும், மாற்றம் பெயரளவுக்குத்தான் என்றும் மக்கள் கூறுகின்றனர்.
மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின்னும், சிறு நகரத்தில் சாயலிலேயே நகரம் உள்ளதாக மாநகர மக்கள் மற்றும் பிற மாவட்டத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். நாக தோசம் நீங்க பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான நாகராஜன் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் முழுதுமிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். நாகதோசம் நீக்கும் வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

நாக தோசம் கழிக்க வரும் பக்தர்களிடம் விற்பனை செய்யப்படும் பால், மஞ்சள், அர்ச்சனை தட்டுகள் மற்றும் சில்வர் தகடுகள் உள்ளிட்ட பொருட்களை இஷ்ட விலைக்கு விற்பதாகவும், பாலில் தண்ணீர் கலந்து விற்பதாகவும், சில்வர் தகடு போன்றவைகளை உண்டியலில் காணிக்யாக செலுத்தவிடாமல் அர்ச்சகர்களே எடுத்துச்செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை முறையாக விற்பனை செய்வது குறித்து இந்துசமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும்..

குறிப்பாக கழிவறை வசதியும் குளிக்கும் வசதியும் இன்றி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர் மேலும் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் நோய் பரப்பும் அபாயத்தில் உள்ளதால் வெளி மாவட்டத்திலிருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர் எனவே மாநகராட்சி நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.