
கேப்டன் மறைவு – சபரிமலைக்கு இருமுடிகட்டிய விஜயகாந்த்… மலைக்கு செல்வதை நிறுத்திய காரணம் இது தான்! – வைரல் போட்டோ!
தமிழ் திரையுலகில் மூத்த நடிகரும், சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமானவர் விஜயகாந்த்.
உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.
திரையுலகிலும், பொது வாழ்விலும் பலருக்கு தன்னால் முடிந்த அளவில் உதவிய கேப்டனின் மறைவு அவரை சார்ந்தவர்களை தாண்டி லட்சக்கணக்கான பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.இறுதி பயணம் முடித்துக்கொண்டார் கேப்டன் விஜயகாந்த்.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நிறைவு.!அவரின் உடலை காண, பல்லாயிரகணக்கானோர், கேப்டனின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்திற்கும், சென்னை தீவுத்திடலுக்கும் வந்திருந்தனர். அதன்பிற்கு நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த் முகத்தை நேரில் பார்க்க முடியாத மக்கள் இன்று கேப்டனின் நினைவிடத்தை காண தேமுதிக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது கேப்டனின் நினைவிடத்தை காண அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. 2 நாட்கள் கழித்து கேப்டன் நினைவிடத்தை காண மக்கள் அனுதிக்கப்படுவர் என எதிர்பார்க்கபடுகிறது. தற்போது தேமுதிக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்
ளது.

விஜயகாந்த் சபரிமலைக்கு பயணம்:
1986 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 18 வருடங்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற விஜயகாந்த் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்த பிறகும் இருமுடி கட்டிக் கொண்டு ஒரு சமயம் சென்றிருக்கிறார். விஜயகாந்த் கோயிலுக்கு வந்திருக்கிறார் என்று அறிந்த மற்ற ஐயப்ப பக்தர்கள் விஜயகாந்தை காண ஏராளமானோர் வந்திருக்கின்றனர்.





அப்போது பக்தர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறதாம். அதிலிருந்தே சபரி மலைக்கு மாலை போடுவதையே நிறுத்திக் கொண்டாராம் விஜயகாந்த். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.