ஈழத்தமிழர்கள் குடியிருப்பு பகுதியில் மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை!

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்திற்குட்ட உச்சப்பட்டி ஊராட்சியில் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. 1500-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. காற்று வீசும் போது மின்கம்பம் ஆடுகிறது. இதனால் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் விழுவதால், அருகே உள்ள கூரை வீடுகளில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என மக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும் பல நேரங்களில் மின்சாரம் தடைபடுகிறது. இதே நிலை தொடர்ந்தால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் மின்கம்பங்கள் கீழே விழுந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். தேசமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்காக புதிய மின்கம்பங்கள் கொண்டுவரப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.

எனவே புதிய மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மின்வாரிய துறையின் மாதாத்திர பராமரிப்பு பணிகளை முறையாக செய்யாத காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!