இது தான் திராவிட மாடல் ஆட்சி! பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதிய அரசுப்பேருந்து.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்திற்கு இன்று மாலை புறப்பட்டுச் சென்ற 54 என்ற சொகுசு பேருந்து மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை துவரிமான் அருகே சென்ற போது கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்த போது பிரேக் வேலை செய்யாததால் அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர், காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கூறும் போது சொகுசு பேருந்து என்பதால் விபத்து நடந்த போது பயணிகள் அதிகம் இல்லாதது உயிர் சேதம் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் அரசு மகளிர் இலவச பேருந்து என்றால் விபத்து நடந்தபோது உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டிருக்கும் என்றும் அரசு போக்குவரத்து கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளை இயக்கி வருவதால் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!