ஜெயலலிதா மரணம் அடைந்த நேரம், நாள் எது என்று முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய, அறிக்கையில் விவரமாக தெரிவித்து உள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அப்போலோ வெளியிட்ட அறிக்கையே தற்போது பொய்யாக மாறி உள்ளது. அப்போலோ அறிக்கையின்படி ஜெயலலிதா இரவு 11.30 மணிக்கு அவர் இறந்தார். இறந்த தேதி 5.12. 2016.
இதுதான் அதிகாரபூர்வமாக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த நேரம் இந்த இறந்த நேரம் குறித்த சர்ச்சை மிகப்பெரிய அளவில் நிலவி வந்தது. இறந்த நேரத்திலேயே தவறு இருப்பதாக கூறப்பட்டது. அவர் மரணம் அடைந்து பல நாட்கள் கழித்துதான், அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது என்று புகார் வைக்கப்பட்டது.இதை பற்றி ஆறுமுகசாமி ஆணையம் தீவிரமாக விசாரணை செய்து வந்தது.
இந்த நிலையில் அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரம் வெளியாகி உள்ளது. சாட்சியங்களின் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நாள் 4-12-2016 அன்று மதியம் 3- 3.50க்கு இடைப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டார், என்று அறிவிக்கப்பட்டது. மருத்துவமனை சாட்சியங்களின் அடிப்படையில் அவர் இந்த நேரத்தில் இறந்ததாக ஆணையம் தெரிவித்து உள்ளது.அதாவது ஜெயலலிதா ஒரு நாளுக்கு முன்பாக இறந்துவிட்டதாக இந்த அறிக்கையில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ஜெயலலிதா 5ம் தேதி இறந்ததாக கருதப்பட்ட நிலையில், 4ம் தேதியே அவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில், 2012-க்குப் பிறகு ஜெ- சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுவிட்டன. ஜெ. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை வெளியிட்டனர்.
ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை. இதில் சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை.ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது, என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மரணம் அடைந்த நேரம் வேறு என்பதால் அப்போது அறிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏன் தாமதம் செய்யப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.