
சதுரகிரியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அஞ்சல் துறை ஊழியர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி.இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் நேற்று பிரதோஷ வழிபாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருகை புரிந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் தமராக்கி வடக்கு பகுதியை சேர்ந்த சிவாஜி என்பவர் இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் ஆக பணிபுரிந்து வந்தவர். கோயிலுக்கு செல்லும் வழியில் பச்சரிசி பாறை என்னுமிடத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.