
கொளுத்தும் வெயிலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பெண்கள்!
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கௌஷிக் அவர்களை ஆதரித்து சிவகாசி பேருந்து நிலையம், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மாரிமுத்து தெரு, பிச்சாண்டி தெரு, புது தெரு, பைபாஸ் சாலை, ஹிந்து மேட்ச் சாலை ஆகிய இடங்களில் அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று ‘மைக் சின்னத்தில்’ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்கள் உள்ள நிலையில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடியாது என்பதால் நாம் தமிழர் கட்சியினர் வீதி வீதியாக பேரணியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். பார்ப்பதற்கு உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் நிர்வாகியை ஆதரித்து வாக்கு சேகரிப்பது போல் அதிக அளவில் பெண்களும், ஆண்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.