13KM-ஐ அதிரச்செய்த சம்பவம்! சினிமா காட்சிகளை போல நடந்த வெடிவிபத்து : 4 பேர் பலி..திக் திக் VIDEO!

காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – நான்கு பேர் உடல் சிதறி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் – கீழஉப்பிலிக் குண்டு சாலையில் ஒரு தனியார் கிரஷர் (கல்குவாரி) உள்ளது.

இந்த கிரஷரில் சல்லி, எம் சான்ட் போன்ற பொருட்கள் பாறைகளில் இருந்து உடைக்கப்படுகிறது.

இந்த கிரசரில் பாறைகளை உடைப்பதற்கு வெடிமருந்து பயன்படுத்தப்படுவதாகவும் . பாறைகளை வெடிக்கக் கூடிய வெடிமருந்துகள் அந்த கிரஷரின் அருகே உள்ள ஒரு அறையில் இன்று காலை இறக்கிய போது வெடிமருந்துகள் வெடித்ததில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மனித உடல்கள் காட்டுப் பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

மேலும் அந்த வெடி மருந்து இருந்த கட்டிடம் அருகே இருந்த இரண்டு வாகனங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் வெடி மருந்துகள் இருப்பதாகவும் இதனால் அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் போலீசார் அருகே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்த வெடி விபத்தின் போது இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 13கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!