நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் NIA சோதனை.. முக்கிய நிர்வாகிகள் வீட்டில் சோதனையால் பரபரப்பு

சென்னை, நெல்லை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட எல்டிடி அமைப்பினரோடு தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்சி, கோவையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தென்காசி மதிவாணன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள விஷ்ணு பிரதாப் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை ஆலந்துறையில் உள்ள ரஞ்சித் மற்றும் காலப்பட்டி முருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினார் இந்த பகுதிகளில் ஊடுருவு இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த சோதனையை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் சோதனைக்கு பின்னரே பிற நாட்டு அமைப்பினர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளார்களா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!