
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 26 வயது இளம் வேட்பாளர்…
யார் இந்த கௌஷிக்!
அரசியல் கட்சிகளால் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களிலேயே தமிழகத்தில் இளம் வேட்பாளர் மருத்துவர் கௌஷிக். அவரின் தற்போதைய வயது 26.
கௌசிக் அவர்கள் 2001 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கத்தார் நாட்டில் உள்ள பில்ல பப்ளிக் ஸ்கூலில் ஆரம்பக் கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.
பின்னர் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓமன் நாட்டில் இந்தியன்ஸ் ஸ்கூலில் தன்னுடைய கல்வியை தொடர்ந்தார்.
பின்னர் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சென்னை பப்ளிக் ஸ்கூல் படித்தார்.
சிறந்த தடகள வீரராக கௌஷிக் 1500 மீட்டர் தடகள பந்தயத்தில் தமிழக அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு தேசிய அளவில் தடகள ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். விளையாட்டுத் துறையில் மட்டும் கெளஷிக் அவர்கள் 150க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இளமை காலம் தொட்டு மருத்துவராக வேண்டும் என்ற பெரும் கனவுகளோடு படித்து கர்நாடக மாநிலம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய இளங்கலை மருத்துவ படிப்பை நிறைவு செய்துள்ளார். மருத்துவ படிப்பு பயிற்சி காலத்தில் கொரோனா நோயாளிகளுக்காக
தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு மாதங்கள் பணியாற்றியுள்ளார். பல இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தன்னுடைய சொந்த முயற்சியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கி மக்களின் நலனுக்காக பணியாற்றினார்.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவுகளையும் நாம் தமிழர் கட்சியின் கொள்கையையும் உள்வாங்கிக்கொண்ட கெளஷிக் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறையில் தன்னையும் இணைத்துக்கொண்டு மக்களுக்கு வேண்டிய சேவைகளை தொடர்ந்து செய்து வந்தார்.

இயற்கை மீது அதிகம் நாட்டம் கொண்ட கௌசிக் அவர்கள் அவருடைய தந்தைக்கு சொந்தமான இடத்தில் கௌஷிக் மற்றும் கௌசிக்கின் தாயார் வெறும் கரடு, முரடாக இருந்த பகுதியை மூன்று வருடங்களாக கடும் முயற்சி செய்து பல உழைப்புகளை போட்டு இன்று ஒரு சிறந்த வனமாக மாற்றியுள்ளார்கள் இயற்கை வேளாண்மை மட்டுமே செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஒரு இயற்கை விவசாயியாகவும் வலம் வருகிறார் கௌஷிக்.
இதுவரை தேக நலனுக்காக செய்து வந்த மருத்துவ பணியை இனி தேச நலனுக்காக செய்ய வந்திருக்கும் கௌஷிக் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கௌஷிக் போட்டியிடுகிறார். நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று வேட்பாளர் டாக்டர் கௌஷிக் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்று இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றத்தில் இருந்து தனக்கன்குளம், நாகமலை புதுக்கோட்டை, திருநகர், ஹார்விப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் திருவள்ளுவர் மற்றும் நம்மாழ்வார் வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பாளர் கௌஷிக் பிரச்சார வாகனத்தில் நின்றபடியும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் சென்ற படி மைக் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.