
விவசாயிகளுக்கான எந்தவித வாக்குறுதிகளையும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை..! -பிஆர்.பாண்டியன்
பாராளுமன்றத் தேர்தல் பிரகடனத்தை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பிஆர்.பாண்டியன் வெளியிட்டார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் நிலை குறித்து தேர்தல் பிரகடனத்தை சங்க தலைவர்
பிஆர் பாண்டியன் வெளியிட்டார்.
மத்தியில் ஆளக்கூடிய மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலை , எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டார். இதனை நிறைவேற்றக்கோரி நீதி கேட்டு டெல்லி நோக்கி நீதி கேட்டு சென்ற விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்கின்றார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய்
2500 ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 மும் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரையில் கொடுக்காமல் ஏமாற்று விட்டார்.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை மேம்பாட்டு ஆணைய நிதியம் என்கிற பெயரில் கிராமப்புற சாலைகளுக்கெல்லாம் சுங்க கட்டணம் வசூல் செய்திட சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் – 2023 என்கிற பெயரால் ஒட்டுமொத்த விளை நிலங்களையும் அபகரித்துக் கொள்ளவும், ஏரிகள் குளம்,குட்டை உள்ளிட்ட நீர், நிலைகளையும் ஆறுகள்.நீர் வழி பாதைகளையும் கார்ப்பரேட் அபகரிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.
காவிரியில் மேகதாட்டு அணைக்கட்ட மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து கர்நாடக அரசுக்கு தமிழக அரசும் துணை போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு குறுவைக்கான பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிட்டு விட்டது.விவசாயி பெயரில் ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடிக்கு மேல் ஊழல் முறைகேடு செய்து வருகிறார்கள்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறது
மத்திய மாநில அரசுகளின் விவசாயிகள் வருவது கொள்கை அம்பலப்படுத்தவும் பாடம் புகட்டவும் அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளே ஒன்றுபடுத்த வேண்டிய தேவையும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதனை வெளிப்படுத்துவ வகையில், விவசாயிகள் நலன் பாதுகாப்பதற்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகிறோம்.
இந்நிலையில் விவசாயிகளை பாதுகாப்பதற்கான பல்வேறு கோரிக்கைகளையும் பாதிப்புகளையும் முன்வைத்துமத்திய மாநில ஆட்சியாளர்கள் மூலம் தீர்வு காணுவதற்கான வகையில் ஒத்த கருத்தை உருவாக்குவதற்காக தேர்தல் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம்.
அரசியல் அணி என்கிற பெயரால் விவசாயிகள் வாக்குகளை பெறும் அரசியல் கட்சிகள் கூட பாராளுமன்ற சட்டமன்றங்களில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும்பாதிப்புகளையும் எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை.
எனவே பிரச்சனைகளை மக்கள் இடத்தில் எடுத்துரைத்து அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராளுமன்றத்தில் விவசாயிகளுடைய குரல் ஓங்கி ஒழிப்பதற்கான வகையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்
என் செந்தில் குமார் அவர்களுக்கு கப்பல் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம்
என்றார்.
முன்னதாக தேர்தல் பிரகடனத்தை
பிஆர்.பாண்டியன் வெளியிட வெற்றி வேட்பாளர் என்.செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி,தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எல் பழனியப்பன், அமைப்பு செயலாளர் ஸ்ரீதர்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தென் மண்டல தலைவர் ஆதிமூலம், மதுரை மண்டல செயலாளர் விருதுநகர் உறங்காப்புளி,மாநில இளைஞர் அணி தலைவர் மேலூர் அருண்,செயலாளர் ஆர் மகேஸ்வரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் கட்டிக்குளம் மணிவாசகம் | தலைவர் ராமலிங்கம்,தவம்,
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இராமலிங்கம், கடலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் , மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஸ்வநாதன்,
தமிழ்நாடு மலைவாழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம் ராமர், மற்றும்
100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உட்பட மலைவாழ் பெண் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.