
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மோர் தானம்!
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் வெயில் வெப்பத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மோர் தானம் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோடைகால கடும் வெயிலின் தாக்கத்தை போக்க மோரை அருந்தி தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.